சசிகலா குடும்பத்தினரின் 190 வீடு, நிறுவனங்களில் நாள் முழுவதும் ரெய்டு-2,000 அதிகாரிகள் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஜெயா டிவி அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 190 இடங்களில் இன்று காலை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இரவிலும் நீடித்தது. வரி ஏய்ப்பு புகாரால் 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் இச்சோதனையை நடத்தினர்.

  சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  விவேக் பொறுப்பில்

  விவேக் பொறுப்பில்

  வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசி மகன் விவேக்தான் இதை நிர்வகித்து வருகிறார்.

  விவேக் உறவினர்கள்

  விவேக் உறவினர்கள்

  மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உறவினர்கள் வீடுகளும் தப்பவில்லை.

  நீடித்த சோதனை

  நீடித்த சோதனை

  சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, தஞ்சாவூர் மற்றும் கொடநாட்டில் மொத்தம் 190 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 105 இடங்களிலும் கோவை, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் இச்சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய இச்சோதனை இரவிலும் பல இடங்களிலும் நீடித்தது. சுமார் 2,000 அதிகாரிகள் இச்சோதனையை நடத்தினர்.

  சோதனை தொடருகிறது

  சோதனை தொடருகிறது

  மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி என்ற பெயரில் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆபரேஷனின் ஒரு பகுதியாகவே சசிகலா குடும்பத்தினர் வீடுகள், நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Income Tax raid at Jaya TV office which is controlled by Sasikala family in Chennai in connection with alleged tax evasion

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X