திவாகரன் வீட்டில் ஐடி ரெய்டு: அந்த ரகசிய வீடியோ விவகாரம் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  திருவாரூர்: மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

  சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

  IT sleuths raid Divakaran's house in Mannargudi

  முறையாக வருமான வரி செலுத்தாததால் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோ ஒன்று தன்னிடம் உள்ளது என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்தார்.

  அந்த வீடியோவை வெளியிட்டால் பலரின் சாயம் வெளுத்துவிடும் என்றும், விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்நிலையில் திவாகரனின் வீட்டில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT officials are conducting raid in Sasikala's brother Divakaran's house in Mannargudi on thursday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற