சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ

  சென்னை: இன்று வடகிழக்குப் பருவமழை நிறைவாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் தென் சென்னை ஆகியப் பகுதிகளில் மழை நின்று ஆடும் என்றும அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது.

  ஆனால் இயல்பை விடவும் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படியே வடகிழக்குப் பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே தீவிரமடைந்து.

  அதிகளவாக 30 செ.மீ மேல்

  அதிகளவாக 30 செ.மீ மேல்

  சென்னை உட்பட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா பல இடங்களில் சராசரியாக 10 சென்டி மீட்டருக்கு மேல் பெய்து வருகிறது. இதுவரை அதிகளவாக சீர்காழியில் 31 சென்டி மீட்டரும் சென்னை மெரினாவில் 30 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

  துல்லியமான கணிப்பு

  துல்லியமான கணிப்பு

  இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் மழை எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் என்ற அமைப்பை சேர்ந்த பிரதீப் ஜான் துல்லியமாக கணித்து மக்களுக்கு எச்சரிகை விடுத்து வருகிறார். அவர் கூறுவதுபடியே மழையும் பெய்து வருகிறது.

  எண்ணிக்கை அதிகரிப்பு

  எண்ணிக்கை அதிகரிப்பு

  அவரது கணிப்புகள் துல்லியமாக இருப்பதால் அவருக்கு மக்களிடையே வரவேற்பும் ஆதரவும் அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக்கில் தமிழ் நாடு வெதர்மேனை பின்தொடருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  ஷிஃப்ட்டாகும் மேகங்கள்

  ஷிஃப்ட்டாகும் மேகங்கள்

  இந்நிலையில் இந்த வாரம் நிறைவான வடகிழக்குப் பருவமழை சாரல் மழையுடன் தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். டெல்டா பகுதியில் இருந்து சென்னை பகுதிக்கு ஷிஃப்ட் ஆவதால் சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் தென் சென்னை பகுதிகளில் மழை நின்று ஆடும் என தெரிவித்துள்ளார்.

  நல்லமழையை பெறலாம்

  நல்லமழையை பெறலாம்

  தென் சென்னை பகுதியில் இருந்து வரும் மேகங்களால் சென்னையின் மற்ற பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். பலவீனமடையாமல் ரேடாரில் காண்பித்தப்படி பெய்தால் வட சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் நல்ல மழையை பெற முடியும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

  100 சதவீதம் பலிக்கிறது

  100 சதவீதம் பலிக்கிறது

  இருப்பினும் சென்னை முழுவதும் இன்று சீரான அல்லது சாரல் மழை மழையுடன் இந்த வார இறுதி தொடங்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் தமிழ்நாடு வெதர்மேனின் மழைதொடர்பான முன்னெச்சரிக்கைகள் 100 சதவீதம் உண்மையாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Rain Update - As posted earlier, the cloud mass from Delta shifted close to Chennai and ECR, OMR and South Chennai are getting steady rains. Its going to be the perfect monsoon weekend to start with drizzly type rains - Tamilnadu weatherman

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற