ஜாக்டோ - ஜியோ போராட்டம் - கல்லூரி பேராசியர்களும் ஆதரவு!: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு கல்லூரி பேராசியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்தால் அரசு பணிகள் பாதிப்படைந்துள்ளது.

Jacto-geo got support from professors association

அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருந்தபோதிலும் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என முடிவு செய்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு கல்லூரி பேராசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
College professors association also supports Jacto - geo protest.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற