For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

104க்குப் போன் செய்தால் இலவச மருத்துவ ஆலோசனை.. தொடங்கி வைத்தார் ஜெ.

Google Oneindia Tamil News

Jaya launches 104 free medical assistance scheme
சென்னை: தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

கொடநாடு முகாமிலிருந்தபடி இதைத் தொடங்கி வைத்தார். தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். 108 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம்.

இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொலைபேசி ‘104' மருத்துவ சேவையினை கொடநாடு முகாமில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

English summary
Chief Minister Jayalalitha has launched the 104 free medical assistance scheme from Kodanadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X