For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டுயானை தாக்கி வனக்காவலர் மரணம்… ரூ.3 லட்சம் ஜெ. நிதி உதவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த வனக்காப்பாளர் முத்துசாமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வனக்காப்பாளர் முத்துசாமியின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Jaya's gesture to Forest Guard's family

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமம், கரடிமடை பிரிவு, ஆத்துப்பள்ளம் பகுதியில் 7.9.2015 அன்று பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்த காட்டு யானையினை, நவக்கரை மற்றும் கரடிமடை பிரிவு வனவர்கள் கொண்ட குழு, வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கூச்சமலை கிழக்கு சுற்று வனக்காப்பாளர் முத்துசாமி காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த வனக்காப்பாளர் முத்துசாமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வனக்காப்பாளர் முத்துசாமியின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today announced an ex-gratia of Rs three lakh to the family of Forest Guard Muthusamy who was killed by a wild elephant in Coimbatore yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X