For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மின் தடையை போக்கும் வகையில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்து வருவதாக கூறப்படுகின்றது.

தமிழகத்தில் கடும் மின் வெட்டு காரணாக திமுக ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டது. பின்பு அதிமுக பதவியேற்றது. அப்போது முதல்வர் ஜெயலலிதா மூன்று மாதத்தில் மின்வெட்டு பிரச்சனையை சரி செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் மின்சார வாரியத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்கு இடையே மின் வெட்டு நேரத்தை குறைத்தார். மின்சார வாரியத்தையும் புத்துணர்வோடு இயங்க வைத்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில மின் வெட்டை போக்கும் வகையில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது எந்த அளவில் சாத்தியம் என ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கலாம் என அதிகாரிகள் குழு கூறியதை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதில் எது சாத்தியமான மாவட்டங்களோ அந்த அந்த மாவட்டங்களில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க உத்தரவிட்டுள்ளாராம்.

English summary
CM Jayalalithaa has turned to solar power to tackle the power cut issue in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X