For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படியும் தீபாவளிக்கு புரோகிராம் போடலாம் ஜெயா டிவி...!

Google Oneindia Tamil News

சென்னை: பேஸ்புக்கில் இப்போது ஜெயலலிதாவையும், அவரது டிவி சேனல்களையும் வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள், கேலிகள், கும்மாளங்கள்.

அதில் ஜெயா டிவியில் வரும் தீபாவளிக்கு என்ன மாதிரியான புரோகிராம்களை அவர்கள் போட வாய்ப்பிருக்கிறது என்பதை கெஸ் செய்து அடித்து நொறுக்கி வருகின்றனர்.

அத்தகைய கற்பனைகளிலிருந்து இதோ ஒரு துளி உங்களுக்காக...

ஒப்பாரி இசை

ஒப்பாரி இசை

காலை 6 மணிக்கு தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து குளித்து வந்த பிறகு டிவி பெட்டி முன்பு உட்கோருவார் துயரத்தைக் கூட்ட ஒப்பாரி இசை.. வழங்குவோர் வட சென்னை வண்டார்குழலி சகோதரிகள். பக்கவாத்தியம் தென் சென்னை மகளிர் அணியினர்.

ஜெயா செய்திகள் (மட்டும்)

ஜெயா செய்திகள் (மட்டும்)

காலை 7 மணிக்கு வழக்கம் போல செய்திகள் ஒளிபரப்பாகும். ஆனால் ஜெயலலிதா செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும்.

என்னைப் பெத்த ஆத்தா.. சிறப்புத் திரைப்படம்

என்னைப் பெத்த ஆத்தா.. சிறப்புத் திரைப்படம்

காலை ஏழரை மணிக்கு என்னைப் பெத்த ஆத்தா.. சிறப்பு அழுகைத் திரைப்படம்.

குன்ஹாவா.. சந்திரசேகராவா... சிறப்பு பட்டிமன்றம்

குன்ஹாவா.. சந்திரசேகராவா... சிறப்பு பட்டிமன்றம்

காலை ஒன்பது மணிக்கு அநீதி இழைப்பதில் அசத்தியது குன்ஹாவா அல்லது சந்திரசேகரவா என்ற தலைப்பில் நிர்மலா பெரியசாமி தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம். குன்ஹாவே என்ற தலைப்பில் குண்டு கல்யாணம், சி.ஆர். சரஸ்வதி, வாசுகி ஆகியோர் பேசுவார்கள். சந்திரசேகரா என்ற தலைப்பில் ஆனந்தராஜ், ராதாரவி, குயிலி ஆகியோர் கூக்குரலிடுவார்கள்.

அமைச்சர்களின் கண்ணீர் பதவியேற்பு..சிறப்பு தொகுப்பு

அமைச்சர்களின் கண்ணீர் பதவியேற்பு..சிறப்பு தொகுப்பு

முற்பகல் 11 மணிக்கு தமிழக அமைச்சர்கள் கண்ணீர் மல்க, விம்மி அழுதபடி பதவியேற்ற அருமையான நிகழ்ச்சியின் தொகுப்பு.. கர்ச்சீப்புடன் நேயர்கள் அமர்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக

தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக

மாலையில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரையுலகினர் கபகபவென்று பேசியபடி நடத்திய மெளன உண்ணாவிரதம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

தேவாவின் சிறப்பு சப்தம்

தேவாவின் சிறப்பு சப்தம்

இரவு 7 மணிக்கு கானா கலைஞர் தேவா குழுவினர் நடத்தும் சிறப்பு சப்தம் என்ற வினோதமான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

மன்னர்குடி மகள்

மன்னர்குடி மகள்

இரவு 8.30க்கு மன்னார்குடி மகள் - பெரிய துயரத் தொடர்.

நீங்களும் ஜெயிலுக்குப் போகலாம்

நீங்களும் ஜெயிலுக்குப் போகலாம்

நள்ளிரவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி, அதாவது ராத்திரி 11 மணிக்கு நீங்களும் ஜெயிலுக்குப் போகலாம்.. ஒரு சூடான திரில்லான சமையல் நிகழ்ச்சி.

சிறைக்களம்

சிறைக்களம்

அனைத்து நிகழ்ச்சிகளையும் முடிப்பதற்கு முன்பாக, சிறைக்களம்.. சிறையில் கண்ட சீன்கள் குறித்த ஒரு புலனாய்வு புலம்பல் விமர்சனம்.

English summary
For this Diwali, Jaya TV is in an crisis to chart out the programmes. Here is a tip for them from FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X