வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றி கவலையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வழிப்போக்கர்கள் எல்லாம் கட்சி தொடங்கினாள் கவலை இல்லை - ஜெயக்குமார்-வீடியோ

  சென்னை: தமிழகத்தில் யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள். வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவதைப் பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.

  சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்கள் 51 விசை படகுகளில் கரை ஒதுங்கி உள்ளனர். யாரும் கவலைப்பட தேவையில்லை என்றார்.

  Jayakumar not bothered about Dinakaran's new party

  தொடர்ந்து அவர், குரங்கணி பகுதியில் 200 ரூபாயை பெற்றுக்கொண்டு காட்டுக்குள் அனுமதித்ததாக டிரைவர் கூறிய தகவல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், காட்டுத்தீ சம்பவத்தினை அடுத்து மலையேற்றத்தினை ஒழுங்குப்படுத்த விதிகள் வகுக்கப்படும் என்றார்.

  குற்றப்பின்னணி கொண்ட யாரும் அ.தி.மு.க.வில் கிடையாது என்று கூறிய ஜெயக்குமார், அதிமுக சார்ந்த எதனையும் டி.டி.வி. தினகரன் சொந்தம் கொண்டாட முடியாது என்றார். வருகிற மார்ச் 15ஆம் தேதியன்று மதுரையில் டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது பற்றி கவலையில்லை என்றும் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TN Mininister Jayakumar has said that he and his party is not bothered about Dinakaran and his new party.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற