For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணத்தில் மாற்றம்

By Mayura Akilan
|

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிரசார பயணத்தில் லேசான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் கடந்த 3ம் தேதி முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Jayalalitha changes Lok sabha election campaign schedule.

அவரது தேர்தல் சுற்றுப் பயணத்திட்டம் சற்று மாற்றியமைக்கப்பட்டள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

21.03.2014 - வெள்ளிக்கிழமை

விருதுநகர் - அண்ணாமலையார் நகர், சிவகாசி- திருத்தங்கல் நெடுஞ்சாலை, திருத்தங்கல் நகரம்

சிவகங்கை - போக்குவரத்து நகர், ஆவின் பால்பண்ணை மேல்புறம், காரைக்குடி

23.03.2014 - ஞாயிறு

கடலூர் - மஞ்சை நகர் மைதானம், கடலூர்

விழுப்புரம் (தனி) - ஆவின் பால்பண்ணை எதிரில், திருச்சி பைபாஸ் சாலை - விழுப்புரம் செல்லும் வழி

25.03.2014 - செவ்வாய்

திண்டுக்கல் - அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி ரோடு, திண்டுக்கல்

தேனி - தேனி-ஆண்டிபட்டி ரோடு, கோவில்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்டி ஒன்றியம்

27.03.2014 - வியாழன்

புதுச்சேரி - ஏஎப்டி மைதானம், கடலூர் சாலை, உப்பளம்

28.03.2014 - வெள்ளி

மதுரை - கிருஷ்ணா திடல், திருப்பாலை (மாநகராட்சி 24-ஆவது வட்டம்)

29.03.2014 - சனி

ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

01.04.2014 - செவ்வாய்

பொள்ளாச்சி - சிடிசி மேடு, ஆச்சிப்பட்டி ஊராட்சி, பொள்ளாச்சி

கோயம்புத்தூர் - வ.உ.சி. பூங்கா மைதானம், கோவை

03.04.2014 - வியாழன்

நாமக்கல் - கருப்பட்டி பாளையம் பிரிவு, கிரீன் பார்க் பள்ளி அருகில், நாமக்கல்

சேலம் - போஸ் மைதானம், சேலம்

05.04.2014 - சனி

தஞ்சாவூர் - புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் நகராட்சி மைதானம்

திருச்சிராப்பள்ளி

இடமலைப்பட்டி புதூர் மைதானம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி

08.04.2014 - செவ்வாய்

அரக்கோணம் - அம்மூர் பேரூராட்சி, ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் (தனி) - சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, கவரப்பாளையம், ஆவடி

10.04.2014 - வியாழன்

நீலகிரி (தனி) - சிறுமுகை நான்கு ரோடு, தேரம்பாளையம், காரமடை ஒன்றியம்

11.04.2014 - வெள்ளி

திருநெல்வேலி - திருநெல்வேலி மாநகராட்சித் திடல்

13.04.2014 - ஞாயிறு

கரூர் - திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், கரூர்

பெரம்பலூர் - தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறி பேரூராட்சி

15.04.2014 - செவ்வாய்

ஆரணி - ஆரணி ரோடு மைதானம், செய்யார்

வேலூர் - காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்

17.04.2014 - வியாழன்

கிருஷ்ணகிரி - பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி

தருமபுரி - தருமபுரி பென்னாகரம் சாலை, மேம்பாலம் அருகில்

19.04.2014 - சனி

மத்திய சென்னை - வட சென்னை

21.04.2014 - திங்கள்

ஆலந்தூர் - தென் சென்னையில் பிரச்சாரக் கூட்டத்தை நிறைவு செய்கிறார் தமிழக முதல்வர்.

English summary
The chief minister Jayalalitha has changed her Lok sabha election campaign schedule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X