For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி வாய்மூடி மவுனமாக இருந்தவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலாரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலம் தமிழர்களுக்கும், மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து விட்டார் கருணாநிதி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

சென்னை தீவுத்திடலில் கடந்த 9ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பிறகு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்திலும், அதை தொடர்ந்து தர்மபுரியிலும் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து, வாக்கு சேகரித்தார். இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, முதுகுளத்தூர், ராமநாதபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் என 14 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

Jayalalitha election campaign in Aruppukottai

ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்கள்:

மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசியவர் கருணாநிதி.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

  • மீனவர்களின் படகுகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
  • கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது வாய்மூடி மவுனமாக இருந்தவர் கருணாநிதி
  • அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டு சென்றிருக்காது
  • இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை தடுக்க தவறியவர் கருணாநிதி
  • அம்மா திட்டங்கள் அனைத்தும் நீங்கள் எதிர்பாராத திட்டங்கள்
  • மக்களால் நான், மக்களுக்காகவே நான், அதாவது உங்களால் நான் உங்களுக்காகவே நான்.
  • உங்களுக்காகவே அர்பணிக்கப்பட்டதுதான் என் தவவாழ்வு
  • சொல்லாத பல திட்டங்களையும் நான் நிறைவேற்றியுள்ளேன்
  • உங்களுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத்தான் தெரியும்
  • மீனவர்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்
  • உங்கள் அன்பு சகோரியின் அரசுதான் பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது
  • மதுவிலக்குப் பற்றி பேசும் அருகதை கருணாநிதிக்கும் இல்லை, திமுகவிற்கும் இல்லை
  • மதுவிலக்குப் பற்றி கருணநிதி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது
  • 2016ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
  • மது அடிமைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
  • தொடர்ந்து அதிமுகவின் 5 கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்டத் திட்டங்களை ஜெயலலிதா பட்டியலிட்டார்.
  • பிரச்சாரத்தின் போது உங்களின் தாய் என்றும் உங்கள் அன்பு சகோதரி என்றும் பேசினார் ஜெயலலிதா.
  • வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதாவை மட்டுமே அதிகமாக ஒளிபரப்பியது ஜெயா தொலைக்காட்சி.
  • கூட்டத்தை அதிக நேரம் ஒளிபரப்பவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பினார்கள்
  • அவசரத்திற்கு மக்கள் நடந்து செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டிருந்தனர்.
  • பிரம்மாண்டமான முகப்பும், பிரம்மாண்ட கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன.
  • தொகுதிக்கு 10, 000 வரை அழைத்து வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதா பேசுவதைக் கேட்டனர்.
English summary
Jayalalitha today election campaign in Arupukkottai for four district ADMK candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X