சட்டசபையில் பிப்ரவரி 12ல் ஜெ. படம் திறப்பு... மோடி கைவிரித்ததால் சபாநாயகரே திறந்து வைக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

  சென்னை : சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் பிப்ரவரி 12ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வந்து ஜெ படத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சபாநாயகர் தனபாலே ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் புகைப்பட திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அவரே புகைப்படத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டது.

  Jayalalitha photo to be inaugurated at assembly hall on monday

  ஆனால் பிரதமர் ஜெயலலிதா புகைப்படத் திறந்து வைப்பதற்கு கிரீன் சிக்னல் கிடைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 12ல் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சபாநாயர் தனபால் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

  ஏற்கனவே சட்டசபை வளாகத்தில் மறைந்த முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், படம் இடம்பெற்ற நிலையில் தற்போது அந்த வரிசையில் ஜெயலலிதாவின் புகைப்படமும் திறந்து வைக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியிடம் தேதி கேட்டு காத்திருந்தது போதும் என்ற முடிவுக்கு அரசு வந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை ஜெயலலிதா படம் சட்டசபையில் திறந்து வைக்கப்படும் என்று திடுதிப்பென அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former CM Jayalalitha's photo to be inaugurated at assembly hall on Moday by Speaker Dhanapal, as government is waited for PM Modi's arrival made this immediate announcement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற