For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதை... இதை... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்: துள்ளும் சுப்பிரமணிய சுவாமி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான்.

அது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Jayalalithaa DA case: I'm not surprised, was expecting it, says Subramanian Swamy on HC verdict

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான்.

காலையில் எனது ட்விட்டர் வலைதளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனினும், இந்த விவகாரத்தில் நீதிபதி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடக நீதிமன்றம் மிக சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

English summary
Reacting over Senior Bharatiya Janata Party leader Subramanian Swamy on Tuesday expressed his pleasure over Karnataka High Court's verdict to reject the former Tamil Nadu chief minister J Jayalalithaa bail plea in disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X