For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரண படுக்கையில் ஜெ.: பிரியாணி, பட்டுப் புடவை, சினிமா சகிதம் சசி கோஷ்டி கூத்துகள்- அப்பல்லோ பகீர்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பம் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அம்பலப்படுத்தியுளனர்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவின் போதும் சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய பகீர் கூத்துகளை அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பகிரங்கப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது அங்கு சசிகலா குடும்பத்தினர் அரங்கேற்றிய ஆட்டங்கள் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்த தகவல்கள் அத்தனையுமே பகீர் ரகம்தான்... இப்படியெல்லாம் கூடவா ஆடுவார்கள் என அதிர வைக்கிறது அந்த தகவல்கள். அந்த தகவல்களின் தொகுப்பு:

செப்டம்பர் 22-ந் தேதி இரவில் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வார்டின் வாசலில் ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்.

இடைவிடாத சாப்பாடு

இடைவிடாத சாப்பாடு

ஜெயலலிதாவின் அறைக்கு உள்ளே சசிகலா மற்றும் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட சிலர் மட்டுமே சென்று வந்தனர். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோவின் 2-வது தளத்தில் இருந்த சமையலறையில் இடைவிடாமல் உணவு சமைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

நள்ளிரவு புறப்பாடு

நள்ளிரவு புறப்பாடு

சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரையில் அப்பல்லோவில் சகல வசதிகள், சாப்பாடு, தூக்கம், விடிய விடிய சினிமா என நிம்மதியாகவே இருந்திருக்கின்றனர். சில நாட்கள் சசிகலா இரவு நேரங்களில் வெளியே சென்றும் வந்தார். அதுவும் மீடியாக்கள் வெளியே இல்லாத நேரம் பார்த்துதான் சசிகலா கிளம்பியிருக்கிறார்.

6 கார்கள்...

6 கார்கள்...

அதிகாலையில் 3 அல்லது 4 மணிக்கு உள்ளே சசிகலா திரும்பி வந்துவிடுவாராம். சசிகலா வெளியே சென்று வர 6 கார்களை பயன்படுத்தி இருந்திருக்கிறார்.

அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை

அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை

விசிட்டர்ஸ் ஹாலில்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அமர்ந்து இருப்பார்கள். அங்கு வரும் ஓபிஎஸ், தம்பிதுரை, பொன்னையன், வேலுமணி ஆகியோர் இந்த அதிகாரிகளை மட்டும் சந்தித்துவிட்டு வெளியே செல்வார். அதுவும் ஒரு டீயை குடிக்க வைத்துவிட்டு உடனே ஓபிஎஸ் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிடுவார்கள்.

ஜெ.வை யாரும் பார்க்க கூடாது

ஜெ.வை யாரும் பார்க்க கூடாது

மற்ற அமைச்சர்கள் அனைவரும் சிந்தூரி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்களும் அப்பல்லோவுக்கு வந்தோம் என அட்டென்டென்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த அதிகாரிகளைப் பொறுத்தவரை சசிகலாவையோ ஜெயலலிதாவையோ ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் 'கண்ணும் கருத்துமாக' மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

பிரியாணி ஆர்டர்

பிரியாணி ஆர்டர்

இதில் உச்சகட்டமாக இரவு நேரங்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்திருக்கின்றனர் சசிகலாவும் அவரது உறவினர்களும். தலப்பா கட்டி ஆர்டர் தொடர்பான விவரம் போலீசின் வாக்கி டாக்கியிலும் கூட கேட்க முடிந்திருக்கிறது.

ஜெ. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு

ஜெ. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு

ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பிரபலமான ஜவுளி கடையில் இருந்து 8 பைகளில் பட்டுப்புடவைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த புடவைகள் சசிகலாவுக்குதானாம். அதாவது ஜெயலலிதா உடல் வைக்கப்படும் இடத்தில் எந்த சேலை கட்டுவது என்பதற்கான செலக்ஷனாம்.

மிதமிஞ்சிய மகிழ்ச்சி

மிதமிஞ்சிய மகிழ்ச்சி

சசிகலா, சிவகுமாரைத் தவிர அவரது சொந்தங்கள் ஒருவர் கூட ஒருநாளும் ஜெயலலிதாவை எட்டி கூட பார்க்கவில்லையாம். அனைவருமே ஏதோ ஒரு மிதமிஞ்சிய மகிழ்ச்சி உணர்வில்தான் திளைத்திருக்கிறார்கள்.

ஜெ.வின் பிரஸ் மீட் தடுப்பு

ஜெ.வின் பிரஸ் மீட் தடுப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் உடல்நலம் சில நாட்கள் தேறியிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பியிருக்கிறார். ஆனால் சசிகலா இதைத் தடுத்துவிட்டாராம்.

சிசிடிவி கேமராக்கள்

சிசிடிவி கேமராக்கள்

அதேபோல அப்பல்லோவில் இருந்த அத்தனை சி.சி.டி.வி. கேமிராக்களையும் அகற்றியும் இருக்கிறார்கள்..அப்பல்லோவில் என்ன நடந்தது.. என்பதற்காக ஒரு ஆதாரமும் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறது சசிகலா அண்ட்கோ என்கின்றனர் பீதியில் இருந்து விலகாத போலீஸ் அதிகாரிகள்.

English summary
TamilNadu police official sources revealed that Jayalalithaa's appolo days. Sasikala and her relatives enjoyed in Apollo Hospital that time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X