For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இல்லாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு சிறப்பு அங்கீகாரம்?.. மறுக்கும் மத்திய அரசு!

இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரிக்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1000 கோடி வளர்ச்சி நிதி வழங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கட்டப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு விருது வழங்கிய மத்திய அரசு- வீடியோ

    சென்னை: இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரிக்கு, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1000 கோடி வளர்ச்சி நிதி வழங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம், தற்போது கல்லூரி ஒன்றை தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கான திட்டமிடல் யோசனை மட்டுமே வெளியாகி உள்ளது.

    இன்னும் உறுதியாக என்னமாதிரியான கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் எந்த இடத்தில் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறப்படவில்லை. 2021க்குள் கல்லூரி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வழக்கம்

    வழக்கம்

    மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு அவ்வப்போது இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 6 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து எல்லோருக்கு ரூபாய் 1000 கோடி வளர்ச்சி நிதி கொடுத்தது.

    பரிசு யாருக்கு

    பரிசு யாருக்கு

    இதில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆறாவது கல்லூரியாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட்க்கும் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த இந்த பணத்தை செலவிட வேண்டும்.

    ஜியோ

    ஜியோ

    ஆனால் பிரச்சனை என்னவென்றால், உலகத்தில் இப்படி ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற கல்லூரி எங்குமே இல்லை. இப்போது வரை அது முகேஷ் அம்பானியின் அடுத்த கட்ட திட்டம், கனவு மட்டுமே. இதற்காக மத்திய அரசு ரூபாய் 1000 கோடியை வாரி இறைத்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

    விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

    இதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி,, இந்த கல்லூரி இன்னும் கட்டப்படவில்லை என்றால் கூட, இந்த கல்லூரி தற்போது கட்டுவதற்கான அனுமதி வேண்டி கடிதம் கொடுத்துள்ளது. யுஜிசி விதியின் படி அனுமதி கடிதம் அளித்த கல்வி நிறுவனம் ஒன்றை விருது வழங்க தேர்வு செய்யலாம். ஆனால் அந்த கல்லூரி அடுத்த 3 வருடங்களுக்குள் கட்டப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் இந்த விருது வழங்கப்பட்டது என்றுள்ளனர்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    அதேபோல் இந்தியாவில் உலக தரத்தில் கல்வி நிறுவனங்கள் உருவாவதை இது ஊக்கிவிக்கும் என்றுள்ளனர். தனியாராக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவன வளர்ச்சிக்கு இவ்வளவு பணம் கொடுப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளது. 2021 கல்லூரி கட்டப்பட்டு விடும் என்பதால், இப்போது பணம் கொடுப்பதில் தவறில்லை என்றுள்ளனர்.

    என்ன விதிமுறை

    என்ன விதிமுறை

    மேலும் எதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர். அதாவது, 1.கல்லூரிக்கான போதிய நிலம், 2. கல்லூரி கட்டும் குழுவில் திறமையான நபர்கள், 3.கல்லூரி கட்ட போதுமான பணம், 4. சிறந்த தெளிவான குறிக்கோள் இது இருக்கும் கல்லூரிகளை பார்த்து மட்டுமே கடைசியில் ஜியோவை தேர்வு செய்ததாக கூறியுள்ளனர்.

    பணம் கொடுப்பது

    பணம் கொடுப்பது

    மேலும் இதுகுறித்து மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், 3 வருடம் கழித்து இந்த கல்லூரியில் ஆய்வு செய்யப்படும். அதன்பின்பே மானியம் குறித்த முறையான அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்படும். மூன்று வருடத்திற்கு பின் இந்த கல்லூரி எப்படி உருவாகி இருக்கிறது என்று சோதனை நடத்தப்படும். யுஜிசி விதியில் இதற்கு இடம் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

    English summary
    JIO institute gets institute of eminence award and Rs.1000cr from Central BJP government even before it is set up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X