முந்திரிக்கொட்டை வேலை செய்து அவமானப்பட்ட ஜூலி... ஆறுதல் சொல்லும் ஓவியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸில் பங்கேற்றுள்ள ஜூலி எதையோ முந்திரிக்கொட்டைத்தனமாக செய்து அவமானப்படுத்தப்படுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

விஜய்டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களை அளவே இல்லாமல் வெறுப்பேற்றி வருகிறது. நாள்தோறும் ஒரு நாடகத்தை நடத்தி ஆர்வத்தை தூண்டுகிறோம் பேர்வழி என்ற வகையில் புரமோவையும் வெளியிட்டு வருகின்றனர்.

இன்றை நிகழ்ச்சியில் இடம் பெறும் காட்சியாக, நிகழ்ச்சிக்கு சில விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு முன்னிலையில் எப்போதும் போல ஜூலி ஆட்டம் போடத் தொடங்குகிறார்.

ஆறுதல் சொல்லும் ஓவியா

ஆறுதல் சொல்லும் ஓவியா

இதனை சற்றும் விரும்பாத நமீதாவும் காயத்ரியும் ஏதோ சொல்ல அவமானத்தில் அவர் அறைக்கே திரும்புவதாக உள்ளது காட்சி. அப்போது அவருக்கு ஓவியா ஆறுதல் கூறுகிறார்.

நியாயம் கேட்கும் ஓவியா

நியாயம் கேட்கும் ஓவியா

ஜூலியின் சுய ரூபம் தெரியாமல் அவருக்காக நியாயம் கேட்க போய் நமீதாவிடமும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார் ஓவியா. இந்நிலையில் காயத்ரியும் நமீதாவும் தனியாக இருக்கும்போது ஒரு நபரை திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மூஞ்சை உடைக்கனும்

மூஞ்சை உடைக்கனும்

அனேகமாக அது ஜூலியாகத்தான் இருக்கும் எனத் அனுமானிக்கப்படுகிறது. அப்போது மூஞ்சை உடைக்கத்தோன்றியதாக கூறுகிறார் நமீதா.

ஓவியாவை வச்சு செய்

ஓவியாவை வச்சு செய்

என்ன நடந்தது என இன்று இரவு நிகழ்ச்சியில் தெரியவரும். நேற்றுதான் காயத்ரி, ஓவியாவை வச்சு செய் என ஜூலிக்கு கட்டளையிட்டார். இந்நிலையில் இன்று ஜூலியை வச்சு செய்துள்ளார் காயத்ரி.

போலி ஜூலி காயத்ரி

போலி ஜூலி காயத்ரி

காயத்ரியை பேரை சொல்லி அழைத்தால் தனக்கு சுர்ரென இருப்பதாக அன்பு மழை பொழிந்தார் ஜூலி. மொத்தத்தில் பழகும் யாருக்கும் காயத்ரியும் ஜூலியும் உண்மையாக இல்லை என்பது மட்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie insulted by somebody else in the biggboss program. Oviya conveys julie. Namitha scolding Oviya because of julie.
Please Wait while comments are loading...