For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யுங்கள்- கமல்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கமல்- வீடியோ

    சென்னை: பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே என்று கமல் தெரிவித்துள்ளார்.

    சென்னை- தூத்துக்குடிக்கு சென்ற விமான நிலையத்தில் பயணம் செய்த தமிழிசையை பார்த்ததும் அதில் பயணம் செய்த மாணவி சோபியா பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து விமான நிலையத்தில் தமிழிசை அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    Kamal criticises for Sophia arrest

    புகாரின் பேரில் நேற்று மாலை சோபியா கைது செய்யப்பட்டார். இதை அரசியல் தலைவர்களும், மாணவர்கள் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியாவுக்கு ஜாமீன் கோரி அவரது தந்தை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சோபியாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
    நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Kamal Haasan asks that if no one criticise anyone in public place is offence means, all the political leaders are to be arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X