எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்: கமல்
தமது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியிருந்தனர்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பலாம்.
Singapore plays it's national anthem every midnight.Likewise do so on DD. Do not force or test my patriotism at various random places.
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications