அரசியலுக்கு வருகிறார் கமல்? பரபரப்பை கிளப்பிய டிவிட்டுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வருகிறார் கமல்? பரபரப்பை கிளப்பிய டிவிட்டுகள்!-வீடியோ

  சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலுக்கு வருவதை பறைசாற்றுவதாகவே உள்ளது.

  யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.. என்ற பழமொழிக்கு ஏற்ப கமல் டிவிட்டரில் தொடர்ந்து மணியோசனை எழுப்பியபடியேதான் உள்ளார். டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறும் கருதுக்களை அவர் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

  பேஸ்புக்கைவிட டிவிட்டரையே அவர் அதிகம் நம்புகிறார். 'அப்யூசிங்' அதிகமாக நடந்தாலும்கூட, அறிவாளிகளின் சபை என்று டிவிட்டரை அவர் நினைக்கிறார். எனவே டிவிட்டரில் தனது போராட்டத்தை தொடங்கிவிட்டதாக அவர் அறிவித்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் கமல் பரபரப்பை ஏற்படுத்திய சில டிவிட்டுகளை இங்கே பாருங்கள்:

  களமிறங்கிவிட்டேன்

  களம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters அனைவருக்கும். இதுவும் களமே. பலகளம் பொருதும் மாமல்லரன்றோ நாம். Translation-We're versatile warriros

  வளர்மதி

  "வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்". இது வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்து கமல் வெளியிட்ட டிவிட்டாகும்.

  குல்லா போட்டுவிட்டார்கள்

  காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.

  வாரும், வெல்வோம்

  சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்.

  குதிரை பேரம்

  நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்

  உம்மை கவனிப்போம்

  பள்ளிப் படிப்பை முடிக்காதவன் " நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம். இவ்வாறு தனது டிவிட்டுகளில் காரம் காட்டி வருகிறார் கமல்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Hassan's famous tweets about current politics are here, which were create discussion among politicians.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற