கர்நாடக தேர்தலுக்காக காவிரி வாரியம் தாமதம்: உங்களுக்குத்தான் அவமானம்- மோடிக்கு கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடிக்கு கமல் வைக்கும் கோரிக்கை-வீடியோ

  சென்னை: கர்நாடக தேர்தலுக்காக காவிரி வாரியத்தை தாமதப்படுத்துவதாக பாமரர்களும் பண்டிதர்களும் நம்புவது உங்களுக்கு அவமானகரமானதும் ஆபத்தானதும் ஆகும் என்று பிரதமர் மோடி குறித்து கமல்ஹாசன் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

  திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், தமிழ், விவசாய அமைப்பினரும் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் கருப்பு சட்டையில் மோடிக்காக ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

  திறந்த வீடியோ

  திறந்த வீடியோ

  இந்த வீடியோவில் கமல் பேசுகையில் பாரத பிரதமருக்கு எனது வணக்கம், நான் கமல்ஹாசன். உங்கள் குடிமகன், இது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பி தரும் திறந்த வீடியோ.

  உங்கள் கடமை

  உங்கள் கடமை

  தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடி கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது, ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

  மாற்றுங்கள்

  மாற்றுங்கள்

  பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என நம்ப துவங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

  என் உரிமை

  தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும், விவசாய பெருமக்களுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை , அதை நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.

  நிலை மாற வழி செய்யுங்கள்

  நிலை மாற வழி செய்யுங்கள்

  இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை உங்களுக்கு கடிதம் வாயிலாக அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து செயல்படுத்துங்கள், இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம், வாழ்க இந்தியா, நீங்களும்...

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal hassan gives open video to PM Narendra Modi and demands to form Cauvery Management board.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற