For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மீனவர் பிரதிநிதிகளுடன் கமல் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் மீனவ பிரதிநிதிகளிடம் மனுக்கள் ஏதாவது இருக்கிறதா? நான் பெறவில்லையான என கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ

    ராமேஸ்வரம்: நடிகர் கமல்ஹாசன் மீனவ பிரதிநிதிகளிடம் மனுக்கள் ஏதாவது இருக்கிறதா? நான் பெறவில்லையா என கேட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் இன்று மீனவர்களை சந்தித்தார். அப்போது மீனவர்களின் பிரச்சனைக்கு செவிசாய்ப்பேன் என அவர் கூறினார்.

    குறைகளை கூறும் மக்களை அரசு தடியடி நடத்தி பதில் சொல்வதாகவும் நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

    மீனவர்கள் ஏமாற்றம்

    மீனவர்கள் ஏமாற்றம்

    இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மீனவர்களின் மனுக்களை பெறாமல் ஹோட்டலுக்கு சென்றதால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர் என செய்திகள் வெளியானது.

    பேச ஏதாவது இருக்கிறதா?

    பேச ஏதாவது இருக்கிறதா?

    இதனையறிந்த நடிகர் கமல்ஹாசன் மீனவ பிரதிநிதிகளை ஹோட்டலுக்கு அழைத்து நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் முன்னிலையில் என்னிடம் பேச ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்.

    ஏதாவது மனுக்கள் இருக்கிறதா?

    ஏதாவது மனுக்கள் இருக்கிறதா?

    மேலும் என்னிடம் கொடுக்க ஏதாவது மனுக்கள் உள்ளதா என்றும் மீனவ பிரதிநிதிகளிடம் கேட்டார். நான் உங்களிடம் இருந்து மனுக்களை பெறாமல் வந்துவிட்டதாக செய்திகள் வெளியானது என்றும் கூறினார்.

    சிறிது அவசரம்

    சிறிது அவசரம்

    மனுக்கள் இருந்தால் கொடுங்கள் என்ற அவர், இன்று நிறைய நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டிருப்பதால் மிக குறைந்த நேரமே இருப்பதாக கூறிய அவர், அதனால் சிறிது அவசரம் உள்ளதாக கூறினார்.

    English summary
    Actor Kamal has asked Fisherman reprasentative that did i not get any petition from you? He said kept full stop for the news that kamal did not get petitions from fishermans.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X