வெள்ள சேதத்தை தவிர்க்க கமல் அதிரடி.. ஏரி, குளங்களை சீரமைக்க 5 லட்சம் பேரை களமிறக்குவதாக அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
வெள்ள சேதத்தை தவிர்க்க கமல் அதிரடி..வீடியோ

சென்னை: விவசாயிகளுடன் இணைந்து கமல் நற்பணி இயக்கத்தினர், ஏரி, குளங்களை செப்பனிட உள்ளதாக கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்

வரி கட்டும் தமிழகம்

வரி கட்டும் தமிழகம்

கூட்டத்திற்கு பிறகு கமல் பேசுகையில், இந்தியாவில் அதிகம் வரி கட்டும் மாநிலங்கள் தமிழகமும், மகாராஷ்டிராவும்தான். வேறு மாநிலங்களில் விவசாயிகள் கடன் விலக்கி விடப்படுகிறது. ஆனால் இங்கு இருக்கும் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறது. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. அதுகுறித்து விரைவில் தகவல் வெளியே வரும்.

அணிலாக உதவி

அணிலாக உதவி

ஆலைகள் செய்வோம், நல்ல சாலைகள் செய்வோம். ஆனால் ஆலைகளை எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆற்றில் இங்கு யாரும் நுழையாதீர்கள் என போர்டு வைத்துள்ளார்கள். அது நிலமே கிடையாது. ஆனாலும் போர்டு வைக்கிறார்கள். பாலம் கட்டும்போது அணில் உதவி செய்தது என புராண கதைகளில் கேட்டுள்ளோம். நானும் ஒரு ஜந்துவாக உங்களுக்கு உதவி செய்ய வருகிறேன். நான் சாப்பிட்ட சோறுக்காக செய்யும் கடமை இது.

ஏரிகள், குளங்கள் செப்பனிடுவது

ஏரிகள், குளங்கள் செப்பனிடுவது

மழைக்காலத்தில் பேசிவிட்டோம். அதற்கு பிறகு என்னவாகும். வெயில் காலத்தில் தண்ணீர் இல்லை என கத்துவோம். பிறகு டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்போம். அந்த லாரி போன சாலை பள்ளமாகும். மழை காலத்தில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கும். இது ஒரு சக்கர சுழற்சியாக மாறிவிட்டது. எனவே, எனக்கு தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட என்ன செய்ய வேண்டுமோ அதற்கு உதவி செய்வார்கள்.

5 லட்சம் பேர் உள்ளனர்

5 லட்சம் பேர் உள்ளனர்

உங்களுக்கு நாங்கள் ஆள் தருகிறோம் என கூற முடியாது. ஆனால் அலாரம் மாதிரி இருப்போம். ஒவ்வொருவர் வீட்டுக்கும் வந்து உதவி பொறுக்குவேன். ஆட்களை நான் அனுப்புகிறேன். நான் சொல்வதையெல்லாம் செய்வதற்கு 37 வருடங்களாக என்னுடன் 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள், குழு குழுவாக பிரிந்து உங்களை சந்திக்க வந்தே தீருவார்கள். நீங்கள் சோறு போட வேண்டாம். வருஷம் முழுக்க நீங்கள் போடுகிறீர்கள். அவர்களை வரவேற்று, வழி நடத்துங்கள். பழைய மண்வெட்டி மட்டும் போதும்.

மேலிடம் மீது தாக்குதல்

மேலிடம் மீது தாக்குதல்

பெண் வீட்டுக்கும் சம்மந்தம் இல்லாமல், மாப்பிள்ளை வீட்டுக்கும் சம்மந்தம் இல்லாமல் திருமண வீட்டில் சிலர் நின்று கொண்டு, சாப்பாடு போடு, சாப்பாடு போடு என்று பந்தியில் சொல்வார்கள். முதலில் அவர்கள்தான் உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பார்கள். அதைப்போல மேலிடத்திலும் நடக்கிறது. நம்மை பார்த்து ஆகட்டும், ஆகட்டும் என்கிறார்கள். ஏதோ நமது வேலை போன்று.

எத்தனை சாக்கடையை அள்ள முடியும்

எத்தனை சாக்கடையை அள்ள முடியும்

என்னை கேட்கிறார்கள், நீங்க டிவிட்டரில் கருத்து சொல்கிறீர்களே, போய் சாக்கடை அள்ளலாமே என்று. அள்ளலாம், ஆனால் எத்தனை சாக்கடையை ஒருவர் அள்ள முடியும்? சொல்றேன் நான், எல்லோரும் எல்லா வேலையும் செய்யனும் என்றால் சிக்கல்தானே. ஆக்கப்பூர்வமாக இவை நிகழ்ந்துள்ளது, இவை நடக்க வேண்டும் என்று சொல்லும் அட்டவணையுடன் நாம் கூடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

ஏரி வழியும்

ஏரி வழியும்

நான் சொன்ன அந்த கூட்டத்தை திரட்டி ஊக்குவித்து உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்கள். அடுத்த வருடம் குளங்களும், ஏரிகளும் நிரம்பி வழியும், ஆனால் வெளியில் கிடையாது. இவ்வாறு கமல் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal says his team of 5 lakh members will do Lake and River recovery work with farmers.
Please Wait while comments are loading...