காயத்ரியின் சேரி பேச்சுக்கு கமல் வக்காலத்து! கஞ்சா கருப்புக்கு மட்டும் ஒரு நியாயமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேரி பிகேவியர் என காயத்ரி பேசியதை தான் சொல்லிக்கொடுக்கவில்லை என கமல் தெரிவித்துள்ளார். இதனால் தான் தெரிவித்த கருத்துக்கு காயத்ரி மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு ஏழரையை கூட்டிவருகிறது. கொஞ்சமும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லால் செல்லும் இந்நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க வன்மமும் வக்கிரமும் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் காயத்ரி ரகுராம், ஓவியாவை பார்த்து சேரி பிகேவியர் என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரியும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக்கோரியும் புகார்கள் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்த கமல், காயத்ரி பேசியதை தான் எழுதி தரவில்லை. அதனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.

சென்சார் செய்ய முடியாது

சென்சார் செய்ய முடியாது

மேலும் சேரி என்று சொன்னதை சென்சார் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். திரைப்படத்திற்கே சென்சார் தேவையில்லை என்கிறார் கமல்.

அதுக்கு மட்டும் பீப்

அதுக்கு மட்டும் பீப்

ஆனால் கஞ்சா கருப்பு சில தினங்கள் முன்பு பரணியை கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க பாய்ந்தார். அப்போது கஞ்சா கறுப்பு பேசிய கெட்ட வார்த்தையை விஜய் டிவி பீப் சவுண்ட் போட்டு ஒலிபரப்பியது.

ஏன் பீப் போடவில்லை

ஏன் பீப் போடவில்லை

ஆனால் சேரியை மட்டும் பீப் செய்யவில்லை. காயத்ரி சொந்த வார்த்தை என்றே வைத்துக்கொள்வோம். ஏன் பீப் போடவில்லை. அப்போது வேண்டுமென்றெ அந்த வார்த்தை விடப்பட்டதா? சாதிய ரீதியில் ஒருவரை திட்டி பேசுவது தவறாகாதா? அதை எப்படி விஜய் டிவி அனுமதிக்கலாம்.

அவ்வளவு கேவலமானதா?

அவ்வளவு கேவலமானதா?

சேரி மக்களின் பிகேவியர் என்ன அவ்வளவு கேவலமானதா? எந்த அடிப்படையில் காயத்ரி அப்படி சொல்லலாம்? இதுகுறித்து கேட்டால் சாதியை ஒழித்து விட்டீர்களா என வக்காலத்து வாங்குகிறார் கமல்.

வக்காலத்து வாங்குகிறார் கமல்

வக்காலத்து வாங்குகிறார் கமல்

இது எந்த விதத்தில் நியாயம்? காயத்ரி பேசியதில் தவறில்லை என்பதை போல் சப்பைக்கட்டு கட்டுகிறார் கமல். கமல் ஸ்க்ரிப்ட் கொடுக்கவில்லை அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். ஆனால் பேசிய காயத்ரியாவது இதற்கு மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal said that he can not appology for the talk of Gayathri's Chery behavior. Kamal supporting Gayathri's speech. wheather Gayathri will appology for her speech.
Please Wait while comments are loading...