பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி கமல் புரிந்து கொள்ள வேண்டும்- நிர்மலா சீதாராமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கத்தைப் பற்றி கமல்ஹாசன் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் அமல் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Kamal understand Demonetisation says Nirmala Sitharaman

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களாகவே கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை வெளி கொண்டு வரவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

எனவே கணக்கில் வராத பணத்தை வெளிகொண்டு வரவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.
பொருளாதார வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் முயற்சியாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதி. அதை தான் மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறினார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பணமதிப்பு நீக்கத்தை நடிகர் கமல்ஹாசன் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்கம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டார் கமல். இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பின்னர் பணமதிப்பு நீக்கத்தை தான் ஆதரித்தது தவறு என்று குறிப்பிட்டார். டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன் என்று கூறியிருந்தார் கமல். அவருக்கு பதில் தரும் தருவிதமாகவே நிர்மலா சீதாராமன் இன்று தனது பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பணமதிப்பு நீக்கத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP is committed to initiate the process of tracking down and bringing back black money stashed in foreign banks and offshore accounts said Central Minister Nirmala Sitharaman, Kamalhassan should understand demonetisation she added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற