காமராஜரால் கல்வி பெற்றவர்களின் வாரிசுகள் எடப்பாடி அரசால் வீழ்த்தப்படுகின்றனரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய காமராஜரால் பலர் கல்வி பெற்றனர். ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடியாரின் சுயநல அரசால், அந்தக் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்றபோதுதான் அனைத்து ஏழை குழந்தைகளும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 'அந்த மதிய உணவுத் திட்டத்துக்காகவும் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும் யாரிடமும் கையேந்த தயாராக உள்ளேன்' என பகிரங்கமாகக் கூறினார் காமராஜர்.

காமராஜரின் உறுதியான கொள்கையால் தமிழகத்தில் ஏழைகள் மற்றும் அனைத்து சாதியினரும் கல்வி கற்க சாத்தியமான சூழ்நிலை எற்பட்டது. அதனால், தமிழகத்தில் அனைத்துத் தர சமூகத்திலிருந்தும் மருத்துவம், பொறியியல், சட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதைவிட காமராஜர் ஆட்சியின் போது தான் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் உருவானார்கள் என்பது வரலாறு.

தனிச்சட்டம் என்ற ஜெயலலிதா

தனிச்சட்டம் என்ற ஜெயலலிதா

இந்நிலையில், இந்தியா முழுவதுக்கும் பொதுவான மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' அறிமுகமானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'அதிமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால் அதற்கு தனிச் சட்டம் இயற்றுவோம்' என என ஜெயலலிதா முழங்கினார்.

ஜனாதிபதி மாளிகையில் உறங்கும் மசோதா

ஜனாதிபதி மாளிகையில் உறங்கும் மசோதா

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஒ.பன்னீர் செல்வம் முதல்வரானார். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய சட்ட முன்வடிவை உருவாக்கி, அதனை சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அனுப்பினர் ஓபிஎஸ். ஆனால், குடியரசுத் தலைவர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவே இல்லை. அது கிடப்பிலேயே போடப்பட்டு விட்டது.

அரசாணை ரத்து

அரசாணை ரத்து

இந்நிலையில், மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வெளியிட்டார். ஆனால், அதற்கும் உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழக மாணவர்களின் பரிதாப நிலை!

தமிழக மாணவர்களின் பரிதாப நிலை!

நீட் தேர்வை, இந்தியா முழுவதும் 8,46,947 பேர் எழுதினார்கள். தமிழில் 15, 206 மாணவர்கள் எழுதினார்கள். ஆனால் இவர்களில் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் இல்லை. இந்த நிலையில் மாநிலத் தேர்வு எழுதிய மாணவர்களின் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தான் மருத்துவப் படிப்புக்குச் சேரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத் தேர்வு முறையில் பரீட்சை எழுதிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிக மதிப்பெண் வாங்கியும் மருத்துவராக முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் யாருக்கு?

சட்டம் யாருக்கு?

'மக்களுக்குத்தான் சட்டமே ஒழிய, சட்டத்துக்காக மக்கள் அல்ல' என்று சொன்ன காமராஜர், தன் ஆட்சியின் போது தமிழகத்தில் எல்லா தரப்பு மாணவர்களையும் கல்வி கற்க வைத்து அரசு அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் உருவாக்கினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசில் உள்ள அமைச்சர்களில் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளிலும் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு ஆளானதால் மத்திய அரசிடம் போரிட்டு உரிமையை மீட்கும் சக்தி இல்லாதவர்களாக உள்ளனர். அதனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பலிகடா ஆக்கியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோரும் மட்டுமில்லாது அனைத்துத் தரப்பு மக்களும் முன்வைக்கின்றனர்.

CM Edappadi says there is no instability in the state | Oneindia Tamil
மாணவர் எதிர்காலம்!

மாணவர் எதிர்காலம்!

காமராஜர் என்னும் ஆளுமையின் தொலைநோக்குப் பார்வையால் கல்வி பெற்ற தலைமுறையினரின் வாரிசுகள் தற்போதைய அரசின் சுயநலத்தால் எதிர்காலத்தையும் மருத்துவக் கனவையும் தொலைத்துவிட்டு நிற்கும் கொடுமை நேர்ந்துள்ளதே என்பதுதான் தமிழகத்தின் குமுறல்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamarajar brought manu plans in education during his rule. But In Edappadi Palanisamy goverment, because of neet exam students life become question mark.
Please Wait while comments are loading...