For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக, அதிமுகவை குறைகூறும் தகுதி பாஜகவிற்கு இல்லை - கனிமொழி தாக்கு

ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே தான் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு திமுக, அதிமுகவை குறைகூற தகுதியில்லை என மாநிலங்களவை திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவி வருகிறது. இந்த பிரச்சனையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே என தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளின் போராட்ட காலம் வெவ்வேறாக இருந்தாலும் நிலைப்பாடு ஒன்று தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

 Kanimozhi Accusation on bjp

தமிழர்கள் பிரச்சனையில் திமுக, அதிமுக நிலைப்பாடுகள் ஒன்றுதான் என கூறிய அவர், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக விசாரித்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை பாஜகதான் கொண்டுள்ளதாகவும், அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு திமுக, அதிமுகவை குறைகூறும் தகுதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

English summary
DMK MP Kanimozhi today meets press at chennai airport, she Accusation on bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X