For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டு(ம்) வந்த தளவாய் சுந்தரம்... கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீண்டும் டிக்கெட் கிடைக்கப் பெற்றுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

அவர் மட்டுமல்லாமல் கே.டி. பச்சமால், ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கும் டிக்கெட் கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் குறித்த ஒரு பார்வை:

கன்னியாகுமரி

கன்னியாகுமரி :பெயர் - தளவாய்சுந்தரம்
பிறந்த தேதி - 17.10.1958
படிப்பு - பி.எஸ்.சி. பி.எல்.
முகவரி - தோவாளை, குமரி மாவட்டம்
பெற்றோர் - நரசிங்கம் பிள்ளை, தம்புராட்டி அம்மாள்
மனைவி - ராஜலெட்சுமி (லேட்)
மகள் - டாக்டர் தம்பரசி எம்.டி. (ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி, சென்னை)
அரசியல் : 1989 தென் சென்னை மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு செயலாளர். 1990 ல் சென்னை மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு செயலாளர். 1991 முதல் 93 வரை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர். 1994 ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர். 1996 மேலவை உறுப்பினர். 1998 ல் அதிமுக வக்கீல் பிரிவு செயலாளர். 2001 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். 2002 ல் வருவாய்த்துறை அமைச்சர். அதிமுக அமைப்பு செயலாளர். 2003 ல் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர். 2007ல் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் . 2010 அதிமுக அமைப்பு செயலாளர். 16.7.2014ல் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர். 18.11.2014 முதல் குமரி மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்.

குளச்சல்

குளச்சல் வேட்பாளர் பெயர் - கே.டி. பச்சைமால்
வயது - 55
முகவரி - தம்மத்துக்கோணம், எறும்புக்காடு அஞ்சல், நாகர்கோவில்
கல்வி தகுதி: தொழிற் கல்வி (நெசவாசிரியர்)
குடும்பம்: மனைவி செல்வ அழகி. 2 மகன்கள்
அரசியல் : 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். 2001 - 2006ல் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்தார். 2006ல் 2வது முறையாக குளச்சலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2011ல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வனத்துறை, தொழிலாளர் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். தொகுதி சீரமைப்புக்கு பின், இவர் வசித்து வரும் பகுதி நாகர்கோவில் தொகுதிக்குள் வந்து விட்டது.

கிள்ளியூர்

கிள்ளியூர் வேட்பாளர் பெயர் - ஏ. மேரி கமலபாய்
பிறந்த தேதி - 30.5.55ஏ. மேரி கமலபாய்
குடும்பம் - கணவர் தேவ சகாயம். அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் (ஓய்வு). 4 மகன்கள்.
முகவரி : நட்டாலம், நேசர்புரம்.
அரசியல் : அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட மகளிரணி பொருளாளர், 2 முறை பொதுக்குழு உறுப்பினர். 1996 - 2006 கிள்ளியூர் யூனியன் சேர்மன். தற்போது கட்சியின் மாவட்ட இணை செயலாளர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை ஆகும்.

பத்மநாபபுரம்

பத்மநாபபுரம் வேட்பாளர் பெயர் : கே.பி. ராஜேந்திரபிரசாத்.
பிறந்த தேதி - 25.4.51.
கல்வி தகுதி - பழைய எஸ்எஸ்எல்சி, ஐடிஐ.
குடும்பம் - மனைவி அல்போன்சா. மகன் - பிரனேஷ்குமார். மகள் - அனிஷா.
அரசியல் : 1972ல் அதிமுகவில் சேர்ந்தார். கிளை செயலாளர், பேரூர் செயலாளர், மேல்புறம் ஒன்றிய செயலாளர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட ெசயலாளர், அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 2001ல் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆனார். 2006ல் 2வது முறையாக பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

விளவங்கோடு

விளவங்கோடு வேட்பாளர் பெயர் -  நாஞ்சில் டோமினிக் என்ற டோமினிக் சாவியோ ஜார்ஜ்
பிறந்த தேதி - 11.4.1969
தந்தை பெயர் : கே.ஜார்ஜ்
கல்வி - பி.எஸ்.சி., எம்.காம்.
குடும்பம் : மனைவி , 3 குழந்தைகள்
தொழில் - மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை தூர கல்வி மையம் நடத்துதல்
அரசியல் : குழித்துறை நகர 15 வது வார்டு அதிமுக செயலாளராக இருந்துள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் (2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை), விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இணை செயலாளர், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு துணைத்தலைவர், ஒன்றுபட்ட குமரி மாவட்ட அதிமுக பொருளாளர், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது கட்சியில் எந்த பொறுப்பில் இல்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை ஆகும்.

நாகர்கோவில்- நாஞ்சில் முருகேசன்

நாகர்கோவில் வேட்பாளர் நாஞ்சில் முருகேசனுக்கு 50 வயதாகிறது. சொந்த ஊர் நாகர்கோவில் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஆரம்பக்கல்வி படித்துள்ளார்.
பெயர்: நாஞ்சில் முருகேசன்

முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவராகவும், மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். இவருக்கு ஆர்.தங்கதேவிகா என்ற மனைவியும், எம்.சிவராம் என்ற மகனும், எம். ஸ்ரீலிஜா என்ற மகளும் உள்ளனர்.

English summary
ADMK candidates bio data for Kanniyakumari district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X