For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரைக்குடி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

சாலை பாதுகாப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பேர்ல் சங்கமம் ரோட்டரி கிளப் இன்ட்ராக்ட் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமையேற்றார். பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் திரு. சகாய செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகப் பயிற்சியாளர் திரு. ஜெயன் செந்தில்அவர்கள் பயிற்சியளித்தார். இன்ட்ராக்ட் சங்கத் தலைவர் ஒன்பதாம் வகுப்பு மாணவன் S. ஆரோக்கிய கிறிஸ்டோபர்அனைவரையும் வரவேற்றார்.

வாகனங்களில் இடது பக்கம்

வாகனங்களில் இடது பக்கம்

இன்ட்ராக்ட் சங்கத்தின் செயலாளர் மாணவன் முகிலன், பொருளாளர் மாணவன் சன்முகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் திரு. ஜெயன் செந்தில்அவர்கள்,சாலையில் செல்லும் போது வாகனங்களில் செல்பவர்கள் இடது பக்கம் செல்ல வேண்டும் என்று விளக்கினர்.

சிவப்பு விளக்கு கவனம்

சிவப்பு விளக்கு கவனம்

நடந்து செல்பவர்கள் வலது பக்கம் செல்ல வேண்டும், எதிர் வரும் வாகனங்களை கவனித்து செல்ல வேண்டும், போக்குவரத்து அடையாளச் சின்னமான சிவப்பு விளக்கு, மஞ்சள் விளக்கு மற்றும் பச்சை விளக்கு சார்பான தகவல்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறினர்.

சீட் பெல்ட் முக்கியம்

சீட் பெல்ட் முக்கியம்

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக் கவசத்தை முறையாக அணிந்து செல்ல வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், அலைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச் செல்லக்கூடாது, வாகனங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது, போன்ற சாலை விதிகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

சிக்னல்களில் கவனம்

சிக்னல்களில் கவனம்

மேலும் சாலை குறியீடுகளான வட்டக் குறியீடுகள் மற்றும் முக்கோண குறியீடுகள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி ஜெயம் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் செய்திருந்தார்.

English summary
Road safety education is very much essential in today's world as road traffic is becoming increasingly busy. Road safty awarness for Karaikudi Ramanathan chettiyar School students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X