For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட இயக்க போராளி கருணாநிதி... 94 வயதிலும் அயராது உழைக்கிறார் - நிதீஷ்குமார் புகழாரம்

சமூக நீதிக்காக அரும்பாடு பட்ட தலைவர் கருணாநிதி, அவரது 94வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி மிகச்சிறந்த சோஷலிச தலைவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கை உயர பாடுபட்டவர் கருணாநிதி என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் பணியாற்ற தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வைரவிழா நடத்தப்பட்டு வருகிறது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டவிழாவில் தேசியத்தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

Karunanidhi is a Dravidian fighter, hails Nitish Kumar

ராகுல்காந்தி, நிதிஷ்குமார், டெரிக் ஓ பிரையன், டி.ராஜா,சீதாராம்யெச்சூரி, நாராயணசாமி, திருநாவுக்கரசர் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது உரையை தொடங்கும் போதே டாக்டர் கலைஞர் கருணாநிதி, தளபதி ஸ்டாலின் என்று அழைத்து திமுக தொண்டர்களின் கைத்தட்டலை பெற்றார்.

கருணாநிதியின் புரட்சிகரமான கருத்துக்கள் இன்றளவும் குடிகொண்டுள்ளன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியவர். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியவர்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வெளிச்சம் கொண்டுவந்தார். மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்க கூடாது என ஒரு பிரிவினர் நெருக்கடி கொடுத்தனர். அப்போது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வி.பி.சிங்கிற்கு ஆதரவு கொடுத்தார் கருணாநிதி.

அகில இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரைப் போல நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் யாருமில்லை.

பெண்களுக்காக பல்வேறு நலப்பணிகளை ஏற்படுத்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர்.
சமூக நீதிக்காக அரும்பாடு பட்ட தலைவர் கருணாநிதி, மிகச்சிறந்த போராளி. 14 வயதில் இருந்து சமூகப்பணியாற்றத் தொடங்கிய கருணாநிதி 94 வயதிலும் அயராது உழைக்கிறார்.

திமுக மிகச்சிறந்த மிகப்பெரிய இயக்கமாக இருக்கிறது. பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பூரண மது விலக்கு பற்றி குறிப்பிட்டுள்ளனர். நான் அதை படித்தேன்.

English summary
Bihar CM Nitish Kumar has hailed DMK chief Karunanidhi as the Dravidian fighter in the function held in Chennai this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X