For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் மீண்டும் அழகிரியா?: கருத்து தெரிவிக்க கருணாநிதி மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் மு.க. அழகிரி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களூக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

செய்தியாளர்: பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு -- வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறபோது, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?

பதில்: என்னுடைய மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.

Karunanidhi refuses to react to reports about patch up with Alagiri

செய்தியாளர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கான தேதியை நீதிபதி அறிவித்துள்ள இதே நாளில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய சட்ட அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறாரே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இதற்காக மத்திய அரசை குறை கூறுவது முறையுமல்ல; நியாயமுமல்ல! மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்

செய்தியாளர்: வர இருக்கிற தீர்ப்பு, தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

பதில் : என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.

செய்தியாளர் : மு.க.அழகிரி மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று செய்தி வருகிறதே?

பதில் : பத்திரிகைகாரர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை.

செய்தியாளர் : கலாநிதி மாறன் சகோதரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறதே?

பதில் : நீங்கள் சொல்லித்தான் இந்த செய்தியே எனக்குத் தெரியும். இதில் கருத்துக் கூற விரும்பவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi on Thursday refused to respond to reports suggesting rapprochement with his son and expelled party leader M K Alagiri, saying he doesn't want to feed the media with any information on this matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X