For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரை கைவிட்டு விட்டாரே வைகோ.. தொண்டர்கள் அப்செட்!

|

கரூர்: மதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் கரூர் இல்லாதது அப்பகுதி தொண்டர்களை சோர்வுறச் செய்துள்ளதாம்.

மதிமுகவின் உயர் நிலைஆட்சி மன்ற குழு, அரசியல் ஆய்வுக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அதன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று நடைபெற்றது.அப்போது லோக்சபா வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்போது பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு விருதுநகர் , ஈரோடு , காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர் , தென்காசி , தேனி , தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதி்ல் கரூர் இல்லாதது அப்பகுதி தொண்டர்களை சோர்வுறச் செய்துள்ளதாம்.

ஆதரவு கொடுத்தது கரூர்தான்

ஆதரவு கொடுத்தது கரூர்தான்

இதுகுறித்து கரூர் மதிமுகவினர் சிலர் கூறுகையில், திமுக-வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது, அவருக்காக ஆதரவு கரம் கொடுத்து நின்றது கரூர் தான். முதன் முதலில் மதிமுக என்ற ஒரு இயக்கம் தோன்ற காணமாக இருந்தது கரூர் என்றால் அது மிகையல்ல.

பரணி மணி

பரணி மணி

மேலும், தற்போது கரூர் மதிமுக மாவட்ட செயலாளராக ஈரோட்டை சேர்ந்த பரணிமணி உள்ளார். ரியல் எஸ்ட்டே , பைனாஸ் என பல தொழில்கள் செய்து வரும் பரணி மணி பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். பரணி மணி ஈரோட்டில் தான் கடந்த 25 வருடமாக வசித்து வருகின்றார். மேலும், அவரது மகள் திருமணத்தை கூட ஈரோட்டில், மதிமுக பொதுச் செயாலளர் வைகோ தலைமையில் நடத்தினார்.

கரூரை கைவிட்டது ஏன்...

கரூரை கைவிட்டது ஏன்...

இந்த நிலையில், கரூர் தொகுதியை மதிமுக கேட்கும் என நாங்கள் பலரும் எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் தலைமை கரூரை கைகழுவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், கரூர் தொகுதியை மதிமுக பெற வேண்டும் என எங்கள் பொதுச் செயலாளர் வைகோவிடம் கோரிக்கை வைப்போம். மதிமுக பலம் வாய்ந்த தொகுதிகளில் கரூர் உள்ளது. நிச்சயம் இந்த தொகுதியில் எளிதாக வெற்றி பெறலாம் என்கின்றனர்.

வைகோ முடிவே இறுதியானது

வைகோ முடிவே இறுதியானது

இது குறித்து மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் இது குறித்து கருத்து கேட்ட போது, எங்கள் கட்சியை பொறுத்தவரை பொதுச் செயலாளர் வைகோ எடுக்கும் முடிவே இறுதியானது. கரூர் தொகுதியில் கட்சிக்கு பலம் இருந்து இருந்தால் பொதுச் செயலாளாரே விட்டு கொடுத்து இருக்கமாட்டார்.

பாமக வெளியேறினால் கரூர் கிடைக்கலாம்

பாமக வெளியேறினால் கரூர் கிடைக்கலாம்

தற்போது பாஜக கூட்டணியில் தேமுதிக, மதிமுக , பா.மக., இந்திய ஜனயாக மக்கள் கட்சி, கொ.மு.க போன்ற கட்சிகள் உள்ளது. இதில் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறும் பட்சத்தில் மதிமுகவுக்கு மேலும் மூன்று தொகுதிகள் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதில் கரூர் சாதகமாக இருக்கும் என பொதுச் செயலாளர் வைகோ கருதினால், கரூரை கைப்பற்றுவோம் என்றனர்.

English summary
Karur MDMK men are worried over the losing the seat to BJP and they are urging the party to reclaim the Karur seat from BJP..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X