எங்களின் நிபந்தனையை ஏற்றால் ஈபிஎஸ் அணிக்கு நல்லது.. கே.பி.முனுசாமி அதிரடி
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் நிபந்தனைகளை ஏற்றால் முதல்வர் எடப்பாடி அணிக்கு நல்லது நடக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவின் ஓ.பிஎஸ் அணி கட்சியை பலப்படுத்துவதற்காக மே 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பணத்தின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலில் செயல்ழுடும் விதம் குறித்தும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இரு அணிகளும் தங்கள் அணியின் பலத்தை நிரூபிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பயணத்திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார்.
இருஅணி இணைப்பு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியை பலப்படுத்த வேண்டிய கடமையை தாங்கள் செய்து வருவதாகக் கூறினார். மேலும் தங்கள் தரப்பில் முன் வைக்கப்படும் 2 கோரிக்கைகளான சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது அதிமுகவில் உள்ள அனைவரும் விரும்பும் கோரிக்கைகள் என்றார்.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்,தங்களது நிபந்தனைகளை ஏற்றால் எதிர்காலத்தில் ஈபிஎஸ் அணிக்கும் நல்லது நடக்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications