அனுமதி கிடைத்தது... இன்னும் 10 நாட்களில் கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி!
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மின்உற்பத்தியை தொடங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சுந்தர். அப்போது அவர் கூறியதாவது:-

கிரிட்டிகாலிட்டி...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தொடர்ந்து 175 நாட்களாக உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் 1,090 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2-வது அணு உலையில் கடந்த மாதத்தில் இருந்து ‘கிரிட்டிகாலிட்டி' எனப்படும் தொடர் அணுப்பிளவு சோதனை நடைபெற்று வருகிறது.

அனுமதி கிடைத்தது...
2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து அனுமதி எதிர்நோக்கி இருந்தோம். தற்போது 2-வது அணு உலையில் இருந்து மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் நேற்று (நேற்று முன்தினம்) அனுமதியை வழங்கி உள்ளது.

மின் உற்பத்தி...
எனவே 2-வது அணு உலையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, இன்னும் 10 முதல் 12 நாட்களில் மின் உற்பத்தி செய்யப்படும். தொடர்ந்து படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

மண் பரிசோதனை...
3-வது, 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 3-வது, 4-வது அணு உலைகள் அமைக்க வருகிற பிப்ரவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இங்கு 5-வது, 6-வது அணு உலைகள் அமைக்க போதுமான இடவசதி உள்ளது. எனவே 5-வது, 6-வது அணு உலைகள் அமைக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்புதல் பெறப்படும்.

சமூக மேம்பாட்டு திட்டம்...
கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 13 கிராமங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை 32 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications