தாக்குதல் தொடுத்த கராத்தே தியாகராஜன்.. லைவ்வாக டெல்லிக்கு போட்டு கொடுத்த குஷ்பு

Posted By: Raj
Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்மை மிக மோசமாக விமர்சித்திருக்கும் கராத்தே தியாகராஜன் மீது டெல்லி மேலிடத்தில் நடிகை குஷ்பு புகார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார். அத்துடன் பெண்களும் மது அருந்தலாம் என சொல்கிற குஷ்புவுக்கு அகில இந்திய பதவியா?

Kushboo lodges complaint against Karate Thiagarajan

கட்சி கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதா படத் திறப்பை ஆதரித்த விஜயதாரணிக்கும் அகில இந்திய பதவியா? என சரமாரி கேள்விகளை கேட்டிருந்தார் தியாகராஜன். இந்த பிரஸ்மீட் விவரங்களால் கொந்தளித்து போனார் குஷ்பு.

இதையடுத்து டெல்லி மேலிடத்தில் கராத்தே தியாகராஜன் மீது புகார் தெரிவித்திருக்கிறாராம் குஷ்பு. அத்துடன் ராகுல் காந்தியை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளாராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress national spokesperson Kushboo lodges complaint against karate thiagarajan in Delhi High command.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற