அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம்... லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி - வீடியோ - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: அசல் ஓட்டுநர் உரிமத்தை 15 நாட்களுக்குள் சமர்பிக்காவிட்டால், வாகனத்தின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து என்கிற ஆணையை திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சேலத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனக் கூட்டம், அதன் தலைவர் குமாரராஜா தலைமையில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் பேசிய நிர்வாகிகள், அசல் ஓட்டுநர் உரிமத்தை 15 நாட்களுக்குள் சமர்பிக்காவிட்டால் வாகனத்தின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து, மேலும் ஓட்டுநர் உரிமத்தை வாகனத்தை இயக்கும் போது வைத்திருக்க வேண்டும் என்ற ஆணையை திரும்ப பெற வேண்டும்.

Lorry owners sangam announced strike on driving license issue

அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால், காலவரையற்ற போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Salem, Lorry owners Sangam announced that submitting original driving license order should be changed, otherwise lorry owners will do protest

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற