மரணம் வரை ஓயாத உற்சாகம்.. ஸ்டாலினை ஸ்டன் ஆக்கிய மா. நன்னன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்டாலினை ஸ்டன் ஆக்கிய மா. நன்னன்-வீடியோ

சென்னை: 94 வயது என்றபோதிலும், எழுச்சியோடு, உற்சாகத்தோடு வாழ்ந்தவர் தமிழறிஞர் மா.நன்னன்.

வயது முதிர்வை ஒரு பொருட்டாக கருதாதவர் மா.நன்னன். இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கூறுகையில்,

அவரது 92வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன், என்னையும் விழாவில் பங்கேற்க அழைத்தார். நான் வெளிநாடு செல்ல உள்ளேனே என்று கூறினேன். அடுத்த நொடியே, பரவாயில்லை, அடுத்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக்கொள்ளலாம் என்றார்.

கவலைப்படவில்லை

கவலைப்படவில்லை

வயது முதிர்வை பற்றி கவலையின்றி நம்பிக்கையோடு இவ்வாறு அவர் கூறினார். அதேபோல அடுத்த பிறந்த நாள் விழாவில் நான் பங்கேற்றேன் என்றார்.

ஸ்டன் ஆக்கினார்

ஸ்டன் ஆக்கினார்

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தமிழறிஞர் மா.நன்னன் ஸ்டன் ஆக்கிய ஒரு சம்பவத்தை சில மாதங்கள் முன்பு பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.

மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

இதுகுறித்து, மா.சுப்பிரமணியன் பேஸ்புக்கில் கூறுகையில், "மரியாதைக்குரிய முனைவர் மா.நன்னன் அவர்களை அறியாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் இருக்க முடியாது.

ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலின் சந்திப்பு

உடல் நலம் குன்றியிருப்பதை அறிந்து நலம் விசாரிக்க சைதை தொகுதி ரங்கராஜபுரத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்தார் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி (ஸ்டாலின்) அவர்கள்.

ஸ்டன் ஆக்கிய நன்னன்

ஸ்டன் ஆக்கிய நன்னன்

அண்ணன் தளபதி அவர்களிடத்தில் மதிப்பிற்கினிய திரு.மா.நன்னன் அவர்கள் வைத்த கோரிக்கை,"எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது...இயக்கப்பணி ஆற்றிட என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.".... சுற்றி நின்ற நாங்களெல்லாம் வாயடைத்து நின்றோம். வாழ்க அன்பிற்கினிய அய்யா மா.நன்னன் அவர்கள்.." இவ்வாறு மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ma.Nannan lived his life with sprit, says many DMK men.
Please Wait while comments are loading...