வெள்ளையர்களுக்கு எதிராக ஓங்கி ஒலித்த கம்பீர தமிழ்க் குரல்.. மா. நன்னன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழர்கள் வணக்கம் சொல்லவே கூடாது! ஏன் தெரியுமா?- வீடியோ

  சென்னை: இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குரல் கொடுத்துப் போராடியவர் தமிழறிஞர் மா. நன்னன்.

  விருத்தாசலத்தை சேர்ந்த மா. நன்னன் சென்னையில் வசித்து வந்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

  Ma Nannan and Quit Inida movement

  அதுமட்டுமல்லாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் தீவிரமாக கலந்து கொண்டவர். இந்தியா முழுவதும் இந்தியை அலுவல் மொழியாக்கும் முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துப் போராடியவர். 1937-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மா. நன்னனும் கலந்து கொண்டார்.

  திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான மா. நன்னன், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், தமிழ் இயக்கத்திலும் கலந்து கொண்டுள்ளார். கடைசி மூச்சுவரை தமிழ் மொழியையே சுவாசித்தார். இதுவரை 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamil Professor Ma Nannan has participated in the Quit India movement during his earlier days. He had also take part in Anti Hindi movement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற