For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதி குன்ஹாவை விமர்சித்த வேலூர் மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Madras HC asks Vellore Mayor to apologise for condemning Jayalalithaa's conviction
சென்னை: நீதிபதி குன்ஹாவை விமர்ச்சித்து தீர்மானம் போட்ட வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடை அடைப்பு, பஸ் நிறுத்தம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது.

பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மவுன விரதம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

நீதிபதி குன்ஹாவை விமர்சித்தும், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், கிண்டலடித்தும் வேலூர் மாநகராட்சி சார்பில் கடந்த 30.9.2014 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவசரம் அவசரமாக திருத்தப்பட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதியை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மேயர் கார்த்திகாயினி மன்னிப்பு கோர வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
The Madras High Court on Tuesday rapped the Vellore Mayor P Karthiyayini asking her to apologize for passing a resolution against judge John Michael D' Cunha who sentenced former CM Jayalalithaa to four years in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X