ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் மறையாது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பேராசிரியரும் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்தார். 76 வயதான அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.

Makkal Needhi maiam leader Kamal haasan condoles Stephen Hawking demise

குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்து இருக்கிறார். சர்க்கர நாற்காலியில் இருந்தபடியே உலகே வியக்கும் பல்வேறு சாதனைகளை படைத்தவர் ஹாக்கிங்.

கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் ஸ்டீபன் ஹாக்கிங் நம்மிடையே வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள்.

அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stephen Hawking died at the age of 76. Makkal Needhi maiam leader Kamal haasan condoles for his demise.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற