For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“மனிதக் கணினி” சகுந்தலாதேவியின் நினைவு தினம் இன்று…

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் தலைசிறந்த மனிதக் கணினிகளில் ஒருவராக கருதப்பட்ட "சகுந்தலா தேவி"யின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி "ரோல் மாடல்" களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு தலை சிறந்த் ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி.

அவருடைய நினைவு தினம் ஏப்ரல் 21 ஆன இன்று கொண்டாடப்படுகின்றது.

Mathematics wizard Shakuntala Devi’s commemoration day today…

"ஹுயூமன் கம்யூட்டர்" சகுந்தலா:

"ஹ்யூமன் கம்ப்யூட்டர் " என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவியிடம் 13 இலக்க எண்ணை, இன்னொரு 13 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால், அதற்கான விடையைச் சொல்ல அவருக்கு ஒரு சில விநாடிகளைத் தவிர பென்சில், தாள், கால்குலேட்டர் என எதுவும் தேவைப்படாது.

கணக்கு மேதை:

சுமார் 33 வருடங்களுக்கு முன்பு அதாவது கணினி என்பது பிரமாண்ட அளவுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கூடங்களில் மட்டுமே இருந்த காலகட்டத்தில் சகுந்தலா தேவியை லண்டன் மாநகரின் இம்பீரியல் கல்லூரிக்கு அழைத்தார்கள் பேராசிரியர்கள்.

வாயடைத்து போன பேராசிரியர்கள்:

அவரிடம் 201 இலக்கங்களைக்கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதன் 23 ஆவது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். 28 விநாடிகளில் சகுந்தலா பதில் சொல்ல, வாயடைத்துப்போனார்கள் அந்தப் பேராசிரியர்கள்.

சர்க்கஸ் கலைஞனின் மகள்:

அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, சிறுமியாக இருக்கும்போது சீட்டுக்கட்டுகளில் இருக்கும் 52 அட்டைகளை வைத்துப் பல வித்தைகளைக் காட்டினார்.

ஏழைக் குடும்பம்:

அந்த வித்தைகள் அனைத்துக்கும் கணிதம்தான் அடித்தளம் என்பதைத் தாண்டி சகுந்தலாவின் தந்தையால் அவரது பெண்ணின் திறமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரால் சகுந்தலாவை நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கக்கூட இயலவில்லை.

ஐன்ஸ்டீனின் பாராட்டு:

ஏழ்மைக்கு இடையிலும் தன்னார்வத்தோடு தன் முயற்சிகளைப் பட்டை தீட்டியபடியே இருந்தார் சகுந்தலா. ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போன ஐன்ஸ்டீன், சகுந்தலாவின் திறமையைப் பாராட்டிச் சான்றிதழும் அளித்திருக்கிறார்.

மிகப் பெரிய இழப்பு:

மனக்கணக்காகவே எப்படி அவ்வளவு பிரமாண்டக் கணக்குகளை சகுந்தலா தீர்க்கிறார் என்பதை சகுந்தலாவிடமிருந்து கடைசி வரை தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டது நம்முடைய மிகப்பெரிய இழப்பு என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி.

English summary
Legendary Mathematics wizard Shakuntala Devi, dubbed as the world’s fastest ‘human computer’ and who made complex mental calculations as a child prodigy, died in this same day April 21, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X