பணத்துக்காகத்தான் கட்டாயப்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டமா? வைகோ பொளேர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மத்திய அரசுக்கு கோடனுகோடி பணம் கிடைக்கும் என்பதால் தான் அதைக் கட்டாயப்படுத்துகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால் தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது.

 Mdmk general secretary Vaiko blamed central government in hydro carbon issue

மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் பாலைவனமாகிவிடும். மத்திய அரசு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி ஒருவருக்கு கொடுத்துள்ளது. அதுவும் முக்கிய காரணம் என கூறினார்.

 Mdmk general secretary Vaiko blamed central government in hydro carbon issue

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஏப்ரல் 12ஆம்தேதி இரண்டாம் கட்ட போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். தற்போது போராட்டம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mdmk general secretary Vaiko accused that central government will get corers opf money from hydro carbon plan.
Please Wait while comments are loading...