ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி வைகோ 4 நாட்கள் வாகன பிரச்சார பயணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் வாகன பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வரும் செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் வைகோ பிரச்சாரத்தை துவக்குகிறார். பின்னர், எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கடைசியாக குளத்தூரில் தனது முதல் பிரச்சாரத்தை இரவு 7.45 மணி அளவில் நிறைவுசெய்கிறார்.

MDMK Leader Vaiko Travel 4 days for close to Sterlite

புதன் கிழமை மாலை 4மணிக்கு தொடங்கி, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் வழியாக வைகோ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

அதேபோல, சனிக்கிழமை அன்று செய்துங்கநல்லூரில் தொடங்கி ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக வந்து இரவு 7.30 மணிக்கு உடன்குடியில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை திருவைகுண்டத்தில் இருந்து பெரிய தாழை வரையிலும் இரவு 8 மணி வரை வைகோ, வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

28ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டீ சிக்னல் அருகே பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோவின் வாகன பிரச்சாரம் குறித்து, மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றுப்பயண விவரத்தில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK Leader Vaiko, will undertake a four-day auto campaign to permanently close the Sterlite plant. On behalf of the party, the general meeting will be held near the VTD signal in Thoothukudi on Saturday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற