ஜெ. நினைவிட டெண்டரில் விதிமுறைகள் மீறல்.. ரத்து செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவது தொடர்பான டெண்டரில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஒப்பந்ததாரர் நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Memorial to late Chief Minister Jayalalithaa: tender case postponed

அதில் டெண்டரில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவுத்ம் அதனால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒப்பந்ததாரர் நடராஜன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The case has been postponed for alleged irregularities in the tender regarding the setting up of Memorial to late Chief Minister Jayalalithaa.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற