திமுக விசுவாசிகளாக மாறி வருகின்றனர் அதிகாரிகள்.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரிகள் பலரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை; திமுக மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரே போடாகப் போட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னையை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சீனிவாசன் பேசியதாவது:

Minister Dinidgul Srinivasan slams TN Officials

அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை. அரசு அதிகாரிகள் பலரும் திமுக மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

அண்மையில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ மிக பிரமாண்ட போராட்டத்தை சென்னையில் நடத்தி காட்டியது. இந்த மிரட்சியில்தான் சீனிவாசன் இப்படி பேசுவதாக கூறப்படுகிறது.

Minister O S Manian Speech About NEET Exam-Oneindia Tamil

இந்த அரசாங்கத்தின் எதிர்காலத்தை நினைத்தபடியே அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கோஷ்டிகள் விரைவில் இணையும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu Minister Srinivasan said that some officials were not cooperating with the State government.
Please Wait while comments are loading...