மூட்டைப்பூச்சி போன்றவர் தினகரன்.. ஜெயக்குமார் கடும் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூட்டப்பூச்சிக்கெல்லாம் பயப்படாத இயக்கம் அதிமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம், தினகரன் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வர உள்ளது ஆட்சிக்கு நெருக்கடியை அளிக்குமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

Minister Jayakumar compared the bed bugs with TTV Dinakara

இதுகுறித்து ஜெயக்குமார் கூறியதாவது: மூட்டைப் பூச்சிக்கெல்லாம் அஞ்சாத இயக்கம் அதிமுக. மூட்டைப் பூச்சிகள் பலவற்றை அதிமுக பார்த்துள்ளது. மூட்டைப்பூச்சிகள் நசுக்கி போடப்பட வேண்டியவை.

கடத்தல்காரன் பில்லா ரங்கா நாட்டை ஆளக் கூடாது. ஸ்டாலினுடன் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார் தினகரன். இருவரும் தொடர்பில் உள்ளனர். இருவரும்
பரஸ்பரம் பேசிக் கொள்கிறார்கள். 2ஜி வழக்கை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் 2ஜி வழக்கில் திமுகவினர் விடுதலை அடைந்ததை தினகரன் தரப்பு வரவேற்றது.

ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்வதைபோல இந்த செயல் உள்ளது. இவ்வாறு, தினகரனை மூட்டைப்பூச்சியுடன் ஒப்பிட்டு பேசினார், அமைச்சர் ஜெயக்குமார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar compared the bed bugs with TTV Dinakaran. The kidnappers Billa, Ranga should not rule the country. Dinakaran is working hand in hand with Stalin, he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற