என்னது முன்னாள் முதல்வர் மதுசூதனனா? கவலையேபடாம பட்டைய கிளப்பும் அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted By:
Subscribe to Oneindia Tamil
உளறிக்கொட்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ- வீடியோ

சென்னை: தமிழக அமைச்சர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதையே கொஞ்சம் கூட கவலைப்படாமல் பேசிவருகின்றனர். தற்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை 'முன்னாள் முதலமைச்சர்' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மகோலை போடும் முயற்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஈடுபட்டார். இது பெரும் நகைப்புக்குரிய விஷயமாகிப் போனது.

Here the Viral video of Minsiter Sellur Raju press meet.

அவரைப் போல அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என பலருமே பொது நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யதார்த்தமாக பதில் கூறுகிறோம் என்கிற பெயரில் உளறிக் கொட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பலியே இல்லை என அப்பட்டமாக பொய் சொன்னார் அமைச்சர் சீனிவாசன்.

பின்னர் மருத்துவர்கள் சொன்னார்கள்.. நான் சொன்னேன் என பலடி அடித்தார் அமைச்சர் சீனிவாசன். இந்த பட்டியலில் அமைச்சர் செல்லூர் ராஜூ, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மதுசூதனன் என உளறி கொட்டினார். இந்த வீடியோ இப்போது வைரலாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Viral video of Minsiter Sellur Raju press meet.
Please Wait while comments are loading...