வெங்கையா நாயுடுவிற்கு ஸ்டாலின் வாழ்த்து.. சின்னம்மா சார்பில் டிடிவி தினகரனும் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் கூறுகையில்,

"நாட்டின் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு வெங்கையா நாயுடு அவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் சின்னம்மாவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

MK Stalin and AIADMK-Amma Deputy General Secretary TTV Dinakaran greets Venkaiah Naidu

அதேபோல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ள வெங்கய்ய நாயுடுவுக்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், திமுக சார்பிலும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற நடைமுறைகளில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதுகாவலராகவும், மாநிலங்களவையின் உயர்ந்த மாண்புகளை நிலைநாட்டவும் பாடுபடுவார் என்று மனதார நம்புகிறேன். வாழ்த்துகிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK acting president MK Stalin and AIADMK-Amma Deputy General Secretary TTV Dinakaran greets Venkaiah Naidu.
Please Wait while comments are loading...