சர்ச்சைக்குரிய அமித்ஷா மகனின் நிறுவனத்தில் சோதனை நடைபெறுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகனின் நிறுவனத்தில் சோதனை நடைபெறுமா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று அளித்த பேட்டி:

பாஜக தலைவர் அமித்ஷா மகனின் நிறுவனம் குறித்து பல செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுமா? என்பதுதான் கேள்வி.

MK Stalin questions over Amit Shah Son Companies

தமிழகத்தைப் பொறுத்தவரையில் டெங்கு பாதிப்பைப் பற்றி கவலைப்படாத அரசுதான் உள்ளது. அதனால்தான் இந்த ஆட்சியை டெங்கு ஆட்சி என குறிப்பிட்டேன்.

தமிழகத்தில் கொசு மருந்து அடிப்பதிலும் கூட ஊழல் நடைபெற்றிருக்கிறது. குட்கா ஊழலில் இருந்து தப்பிப்பது பற்றிதான் அமைச்சருக்கு இங்கே கவலையாக இருக்கிறது.

முரசொலி அலுவலகத்தில் பவள விழா காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி அரங்கம் நிரந்தரமாக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President MK Stalin questioned over the BJP National President Amit Shah's son Jay Shah's companies financial dealings.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற