For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு- ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில்..டாப்பில் இந்தியா!- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

    தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அப்போது ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

    MK Stalin says that There will no law and order maintain in TN

    தமிழகத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்கள் அதிகரிப்பில் சென்னை முதலிடம் வகித்து வருகிறது.

    சாதி கலவரங்களில் தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொள்ளையில் தென் மாநிலங்களில் தமிழகம் 2-ஆம் இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும். தமிழகம் கொதிநிலையில் இருக்கிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஒருவரை டிஜிபியாக தொடர்ந்து பணி செய்ய வைப்பது ஏன். ஓய்வு பெற்றவர் பணியில் இருப்பதால் அடுத்தவருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வர ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK Working President MK Stalin says that there will be no maintain in law and order problem. Chain Snatchings incidents are going high in TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X