ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து என்ன? ஸ்டாலின் அதிரடி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்-ஸ்டாலின் பேட்டி-வீடியோ

சென்னை: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி அரசு பெருபான்மையை நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே அதிமுக 19 எல்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதில் ஒருவர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளராக மாறியுள்ளார்.

MK Stalin sets 7 days deadline for TN Governor

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 98 எல்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எடப்பாடிக்கு ஆதரவாக 114 எல்.எல்.ஏ.க்களும், எதிராக 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெருபான்மை பலத்தை ஆளுநர் மாளிகை முடிவு செய்ய முடியாது.

ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் கூறியுள்ளார். ஒரு வாரத்தில் சட்டசபையை கூட்டாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். மக்கள் மன்றத்தையும் நாடுவோம். எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநர் செய்யும் கால தாமதம் குதிரை பேரத்திற்கு வித்திடும். தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைக்காக ஆளுநரை சந்திப்பது இதுதான் கடைசி முறை. ஆளுநடர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president MK Stalin sets 7 days deadline for TN Governor to act upon plea for floor test
Please Wait while comments are loading...